உக்ரைன் – ரஷ்ய போர் களத்தில் 100க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் கைது

ரஷ்ய – உக்ரைன் போரில் 100க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் போரிட்டு வருவதாகவும், இதுவரை ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுமார் 54 இலங்கையர்கள் உக்ரைனுக்காகவும் 60 பேர் ரஷ்ய தரப்பிலும் போரிட்டு வருவதாக சிரேஷ்ட பொலிஸ் புலனாய்வாளர்கள் உள்ளூர் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், 1000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளதாக வெளியான தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய-உக்ரைன் போரில் பல ஓய்வுபெற்ற இலங்கை படையினர் மனித கடத்தல்காரர்கள் ஊடாக, கூலிப்படை குழுக்களின் உறுப்பினர்களாக இணைந்து கொண்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு முன்னர் அறிவித்திருந்தது.

“கணிசமான எண்ணிக்கையிலான போர் வீரர்கள் போர்க்களத்தில் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும்” என்று பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ரஷ்ய-உக்ரைன் போர் முனையில் இலங்கையர்களின் உயிரிழப்புகள் தொடர்பான மேலதிக விவரங்களைப் பெற பாதுகாப்பு அமைச்சும் வெளிவிவகார அமைச்சும் முயற்சித்து வருகின்றன.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம், பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் இத்தகைய சட்டவிரோத மனிதக் கடத்தல்காரர்களைக் கைது செய்வதற்கான விரிவான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த விடயம் தொடரிபில் பலர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin