ஐபிஎல் போட்டிகளில் அதிவேகமாக 1000 ஓட்டங்களை எட்டிய இந்திய வீரர் என்ற சாதனையை குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர் சாய் சுதர்சன் படைத்துள்ளார்.
சென்னை அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் அவர் 51 பந்துகளில் 103 ஓட்டங்களை குவித்திருந்தார்.
இதன்மூலம் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இணைந்து வைத்திருந்த சாதனையை சாய் சுதர்சன் முறியடித்துள்ளார்.
சச்சின் மற்றும் கெய்க்வாட் ஆகியோர் 31 போட்டிகளில் 1000 ஓட்டங்களை கடந்து சாதனை படைத்திருந்தனர்.
எனினும், 25வது போட்டியில் விளையாடும் சாய் சுதர்சன் இந்த சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
சென்னை அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 231 ஓட்டங்களை குவித்தனர்.
முதல் விக்கெட்டுக்காக சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் 210 ஓட்டங்களை பகிந்துகொண்டனர்.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் முதல் விக்கெட்டுக்கான பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையை சமன் செய்துள்ளனர்.
முன்னதான கடந்த 2022 ஆம் ஆண்டு லக்னோ அணியின் கே.எல் ராகுல் மற்றும் குடியின்டன் டி காக் இணைந்து முதல் விக்கெட்டுக்காக 210 ஓட்டங்களை குவித்திருந்தனர்.
எவ்வாறாயினும், ஐபிஎல் போட்டிகளில் அதிவேகமாக 1000 ஓட்டங்களை குவித்த வீரர்களின் பட்டியில் மேத்யூ ஹைடனுடன் சாய் சுதர்சன் மூன்றாது இடத்தை பகிந்துகொண்டுள்ளார்.
ஷோன் மார்ஷ் 21 போட்டிகளிலும், லெண்டல் சிம்மன்ஸ் 23 போட்டிகளிலும் 1000 ஓட்டங்களை கடந்து முதல் இரு இடங்களை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.