பாகுபலி கதாபாத்திரத்தில் தோனியா?

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் பாகுபலி.

தற்போது பாகுபலி படத்தின் முன் கதை அனிமேஷன் வடிவில் வெப் சீரிஸாக ‘பாகுபலி:தி க்ரவுன் ஆப் ப்ளட்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ளது.

வருகின்ற 17ஆம் திகதி டிஸ்னி ஹொட் ஸ்டார் ஓடிடி தளத்தில் இந்த வெப் சீரிஸ் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இந்த வெப்சீரிஸில் வரும் பாகுபலி தோனியைப் போல் உள்ளதே என சிலர் இயக்குநர் ராஜமௌலியிடம் கேட்க, “என்னைப் போலவே கதாபாத்திரங்களை வடிவமைத்தவர்களும் தோனி ரசிகர்களாக இருக்கலாம்” எனக் கூறியுள்ளார்.

ஒரு வேளை பாகுபலி வடிவத்தில் தோனியைப் பார்க்கும் வாய்ப்பு இரசிகர்களுக்கு கிடைக்கலாம்.

Recommended For You

About the Author: admin