கனேடிய நாடாளுமன்றத்தில் தமிழின படுகொலை நினைவு நாள் நிகழ்வு

தமிழின படுகொலை நினைவு நாள் நிகழ்வு கனேடிய நாடாளுமன்ற வளாகத்தில் நினைவுகூரப்பட்டுள்ளது.

கியூபெக் தமிழ் சமூக அமைப்பு மற்றும் அமைச்சரும், ஸ்காபுரோ தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஹரி ஆனந்தசங்கரி அவர்களின் ஒருங்கமைப்பில் பல கனேடிய தமிழ் அமைப்புகளின் கூட்டாக இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.

நிகழ்வில் கனேடிய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் பங்குபற்றியுள்ளனர்.

குறித்த நிகழ்வு நடைபெற்ற மண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு நிகழ்வில் கலந்துகொண்ட பெருந்திரளானோர் மலர்வணக்கம் வணக்கம் செலுத்தினர்.

தமிழின அழிப்பு நினைவு நாளாக (Tamil Genocide Remembrance Day) மே18 கனேடிய நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு இரண்டாவது வருடமாகவும் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 15 வருட வலிமிகுந்த நினைவுநாளை நினைவுகூரும் விதத்திலும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வில் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் அன்னி கவுட்ராகிஸ் (Annie Koutrakis) தமிழ் இனப்படுகொலை நாளை ஒட்டி தான் உரையாற்றியது பற்றியும் தொடர்ச்சியாக நீதிவேண்டிய பயணத்தின் தனது ஆதரவு தொடரும் என்பதையும் உறுதிப்படுத்தினார்.

Recommended For You

About the Author: admin