அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் எச்சரிக்கை குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேலிய தூதுவர் எர்டன் கவலை வெளியிட்டுள்ளார்.
காசாவின் முக்கிய நகரமான ரஃபாவில் தரை வழித்தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்கா இஸ்ரேலுக்கான ஆயுத உதவிகளை நிறுத்தும் என ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
“ரஃபா மீது தாக்குதல் மேற்கொள்ள இஸ்ரேல் திட்டமிட்டிருப்பதால் பாரியளவிலான உயிரிழப்புகள் பதிவாக கூடும். எவ்வாறாயினும் இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்திவதில் தொடர்ந்தும் ஈடுபடுவேன்.“ என பைடன் உறுதியளித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேலிய தூதுவர் எர்டன்,
“போரின் ஆரம்பத்திலிருந்து நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருந்த ஜனாதிபதியிடயின் இவ்வாறான எச்சரிக்கை ஏமாற்றம் அளிக்கிறது.
பைடனின் கருத்துக்கள் இஸ்ரேலின் எதிர்ப்பு நாடுகளான ஈரான், ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோரால் தாம் வெற்றியடைவோம் என்ற நம்பிக்கையை அளிக்கும்” என தெரிவித்துள்ளார்.