அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வந்தவர் 32 வயதான சவான்னா கிரிகர். இவரது மகன் மூன்று வயதான கெய்தன்.
தனது மகனுடன் வசித்து வந்த கிரிகர், சான் ஆன்டனியோ பகுதியிலுள்ள ஒரு பூங்காவுக்கு சென்று, அங்கு தனது மகனை சுட்டுக்கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரித்தபோது, தற்கொலை செய்து கொள்வதற்கு முந்தின நாள் பணி முடிந்து நேராக அவரது முன்னாள் கணவரின் வீட்டுக்குச் சென்றுள்ளார் கிரிகரின். ஆனால், அப்போது அவர் வீட்டில் இருக்கவில்லை.
இதனால் கோபமுற்ற கிரிகர் முன்னாள் கணவரின் வீட்டை அடித்து நொறுக்கி, சேதப்படுத்திவிட்டு தனது வீட்டுக்கு திரும்பியுள்ளார். வீட்டுக்கு சென்றவர், வீட்டிலிருந்த அவரது திருமண புகைப்படங்களை இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் தனது முன்னாள் கணவருக்கு குறுஞ்செய்திகள் மற்றும் வீடியோக்களையும் அனுப்பியுள்ளார். அவர் அனுப்பிய வீடியோவில், “நீங்கள் வீட்டுக்குப் போனால் உங்களுக்கென்று ஒன்றும் இருக்காது. இந்த நாளின் முடிவில் உங்களுக்கு எதுவும் இருக்காது” என்றும் கூறியுள்ளார்.
மேலும் தனது மகனான கெய்தனிடம் “அப்பாவுக்கு குட்பை சொல்லு“ என்றும் கூறியிருக்கிறார்.
கடைசியாக பூங்காவில் கிரிகர் மற்றும் அவரது மகன் கெய்தனின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட உடல்களில் அவர்களின் தலை பகுதிகளில் குண்டுகள் பாய்ந்துள்ளமை தெரிய வந்துள்ளது.