மோசடியாளர்களால் தொலைபேசி கட்டுப்படுத்தப்படுகிறதா?: மக்களுக்கு அவசர எச்சரிக்கை

இணையவழி மோசடிகள் அதிகரித்துள்ளமை குறித்து இலங்கை வங்கிகள் சங்கம், LankaPay மற்றும் FinCSIRT ஆகியன இன்று ஞாயிற்றுக்கிழமை (05) அறிக்கையொன்றினூடாக பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

“உலகில் கவர்ச்சிகரமான ஒன்லைன் சலுகைகளாக மாறுவேடமிட்டு, தொலைபேசி சாதன பயனர்கள் அறியாத இணைப்புகளை கவனக்குறைவாக அழுத்துவதனூடாக தீங்கிழைக்கும் பயன்பாடுகள் மற்றும் கோப்புகளை பதிவிறக்கம் செய்யும் பல நிதி மோசடி சம்பவங்கள் குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளோம்” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் செயன்முறை மோசடிகளுக்கு, தொலைபேசிக்கான முழுமையான அணுகலை வழங்குவதாகவும் மோசாடியாளர்கள் தொலைவிலிருந்து அதனை கட்டுப்படுத்த உதவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மோசாடியாளர்கள் தொலைபேசியின் கட்டுப்பாட்டை தன்வசப்படுத்தியைதையடுத்து அதில் நிறுவப்பட்ட வங்கி/பணம் செலுத்தும் பயன்பாடுகளை எளிதாக அணுகலாம், இது வங்கிக் கணக்குகள் மற்றும் மொபைல் சாதனம் வழியாக அணுகப்படும் கட்டண அட்டைகளிலிருந்து கொள்ளையிட வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இதுபோன்ற மோசடிகளுக்கு இரையாகாமல் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

இந்த மோசடி செய்பவர்கள் இதுபோன்ற மோசடி நடவடிக்கைகளை மேற்கொள்ள சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறான மோசடிகளிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள இலங்கை வங்கிகள் சங்கம், LankaPay மற்றும் FinCSIRT, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருப்பதற்கு இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்துகின்றன:

• உண்மையற்ற ஒப்பந்தங்களை வழங்கும் ஒன்லைன் விளம்பரங்கள் தொடர்பில் கவனம் செலுத்தல்

• இணைப்புகளை அழுத்தவும் தெரியாத மூலங்களிலிருந்து கோப்புகளைப் பதிவிறக்குவதை தவிர்க்கவும்.

• சமூக வலைத்தளங்கள் அல்லது ஒன்லைன் செய்தியிடல் தளங்களில் அறியப்படாத மற்றும் அறிமுகமில்லாத குழுக்களிலிருந்து நீங்கள் அனுமதியின்றி சேர்க்கப்பட்டுள்ளீர்கள் என்றால் அத்தகைய குழுக்கள் மூலம் பகிரப்பட்ட இணைப்புகளை அழுத்துவதை தவிர்க்கவும்.

• உங்கள் தொலைபேசியில் கடவுச்சொற்களைச் சேமிப்பதைத் தவிர்க்கவும்.

• Apple App Store, Google Play Store போன்ற அதிகாரப்பூர்வ செயலிகளிலிருந்து மாத்திரம் பயன்பாடுகளைப் பதிவிறக்கவும்

• கைரேகை, முக அங்கீகாரம் போன்ற பயோமெட்ரிக் அங்கீகாரத்தைப் பயன்படுத்தவும்.

• அதிகாரப்பூர்வ செயலிகளிலிருந்து சிறந்த வைரஸ் தடுப்பு பயன்பாட்டை நிறுவி, வைரஸ்களை கண்டறிந்து அகற்றுவதற்கு அதனைப் புதுப்பிக்கவும்.

• இணைப்புகளை அழுத்துவன் மூலம் தனிப்பட்ட அல்லது நிதித் தகவலை வெளியிடும்படி உங்களைத் தூண்டும் செய்திகளில் எச்சரிக்கையாக இருங்கள்.

• உங்கள் தொலைபேசியில் வழக்கத்திற்கு மாறான செயற்பாடுகளை நீங்கள் அறிந்தால் உடனடியாக உங்கள் தொலைபேசி டேட்டா/வைஃபையை முடக்கவும் அல்லது ப்ஃளைட் பயன்பாட்டிற்கு மாற்றவும்.

Recommended For You

About the Author: admin