இரட்டைக் குடியுரிமை பெறுவதில் பிரச்சினையா?

புலம்பெயர் நாடுகளில் இருக்கும் இலங்கையர்கள் விரைவில் நிரந்தர வதிவிட விசாவைப் பெற முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மற்றும் அந்தந்த நாடுகளில் நடைமுறையில் உள்ள சட்டங்கள் காரணமாக இரட்டைக் குடியுரிமையைப் பெற முடியாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கூடிய விரைவில் அவர்கள் நிரந்தர வதிவிட விசாவைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிப்பப்பட்டுள்ளது.

”விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டுள்ளன, விரைவில் திட்டம் செயல்படுத்தப்படும். அதற்கு முன்னர் அரசிதழில் வெளியிடப்படும் விசாக்களை இரத்து செய்வதற்கான ஏற்பாடுகளும் அரசிதழில் வெளியிடப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேறொரு நாட்டில் குடியுரிமை பெற்றதன் பின்னர் குடியுரிமை நிறுத்தப்பட்ட இலங்கையர்கள், அவர்களது இலங்கையர்கள் அல்லாத மனைவி மற்றும் அவர்களது பிள்ளைகள் வதிவிட விசாவிற்கு உரிமையுடையவர்கள்.

விண்ணப்பிக்கும் நபர் விசாவிற்கு 1,000 அமெரிக்க டொலர் செலுத்த வேண்டும், அதே நேரத்தில் இலங்கையர்கள் அல்லாத மனைவி மற்றும் ஒரு குழந்தைக்கு தலா 400 அமெரிக்க டொலர்கள் செலுத்த வேண்டும்.

அந்தந்த நாடுகளில் நடைமுறையில் உள்ள சட்டங்கள் காரணமாக இரட்டைக் குடியுரிமையைப் பெற முடியாத வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அபிவிருத்திக்கு உதவுமாறு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் வேண்டுகோள் விடுக்கும் தனது கொள்கைக்கு இணங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கியதாக அவர் கூறினார்.

தற்போதைய தேவையின்படி, முதல் வருடத்தில் மூவாயிரம் குடும்பங்களை உள்ளடக்கிய சுமார் 10,000 விண்ணப்பங்களை எதிர்பார்ப்பதாக ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

நிரந்தர வதிவிட விசா 10 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு, பின்னர் புதுப்பிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விசா பெறுநர்கள் வேலைவாய்ப்பைப் பெறவும், பொதுச் சேவையில் இணையவும், வியாபாரத்தில் ஈடுபடவும், இலங்கையில் முதலீடு செய்யவும் முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin