போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக பணயக்கைதிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுத்து பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல் அவிவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் “போர் புனிதமானது அல்ல, வாழ்க்கை” என்று கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சிலர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மோதலை நீடிப்பதை நோக்கமாக கொண்டுள்ளார் எனவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு பதிலாக காசாவில் இஸ்ரேலின் தாக்குதலை இடைநிறுத்துவது தொடர்பாக எகிப்து மற்றும் கத்தாரின் தூதுவர் கெய்ரோவில் நீண்ட கால பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பணயக்கைதிகள் விடுவிக்கப்படும் போது 40 நாட்கள் போர் இடைநிறுத்தம் மற்றும் இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பலஸ்தீனிய கைதிகளை விடுவிப்பது குறித்து கலந்துரையாடல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது