சீன இராணுவ போர் விமானங்கள், தமது எல்லை வழியாக மீண்டும் ஊடுருவியதாக தைவான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில், தைவானைச் சுற்றி சீனாவின் இராணுவம் அதன் செயல்பாடுகளை கணிசமாக அதிகரித்துள்ளது. தைவானை தனது கட்டுப்பாட்டு பிரதேசமான சீனா கருதுகின்றது.
எனினும், சீனாவின் நிலைப்பாட்டை தைவான் அரசாங்கம் கடுமையாக நிராகரித்து வருகின்றது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 14 சீன போர் விமானங்கள் வடக்கு தைவானின் துறைமுக நகரமான கீலுங்கிற்கு 41 கடல் மைல்கள் (76 கிமீ) அருகில் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக சீன போர் விமானங்கள் தமது எல்லைப் பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தைவான் குற்றம் சுமத்தியுள்ளது.
எவ்வாறாயினும், தனது கடற்படை விமானம் தாங்கி கப்பல்களுடன் போர் பயிற்சிகளை மேற்கொண்டதாக சீனா தெரிவித்துள்ளது. ஆனால் பயிற்சிகள் எப்போது, எங்கு நடந்தது என்ற விடயங்கள் தெரிவிக்கப்படவில்லை.
கடந்த ஜனவரி மாதம் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட லாய் சிங்-தே எதிர்வரும் 20 ஆம் திகதி பதவியேற்க உள்ள நிலையில், சீனா இராணுவப் பயிற்சிகளை தைவான் உன்னிப்பான அவதானித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாய் சிங்-தே, தற்போதைய ஜனாதிபதி சாய் இங்-வென் போன்றே, பெய்ஜிங்கின் இறையாண்மை உரிமைகோரல்களை நிராகரித்து வருகின்றார்.
தமது நாட்டு மக்கள் மட்டுமே தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க முடிவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்