வரலாறுகாணாத மழையால் மூழ்கிய டுபாய்

வறண்ட நாடான டுபாயில் கடந்த ஏப்ரல் 16ஆம் திகதி வரலாறு காணாத மழை பெய்தது. இதில் டுபாய் நகரம் முழுவதும் தண்ணீரில் மூழ்கியது.

பெரும் சேதத்தை மக்கள் சந்தித்தனர். தற்போது வெள்ளம் வடிந்து வருவதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். பலர் தங்களின் கார் மற்றும் உடமைகளை இழந்து தவிக்கின்றனர்.

புயல் மழை பாதிப்பில் இருந்து மக்கள் விரைவில் மீண்டு வர டுபாய் அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. புயல் மழை நேரத்தில் போக்குவரத்து விதிகள் மீறியோர் மீதான சட்ட நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கார் உள்ளிட்ட வாகனங்கள் சேதமுற்று இருந்தால் இதற்கான சான்று கட்டணம் இல்லாமல் பெறலாம்.

இந்நிலையில் மக்கள் பொருளாதார சூழலை சமாளிக்க அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் ஏப்ரல் 23ஆம் திகதி (இன்று) ஒரு வாரம் முன்கூட்டி சம்பளம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் படி அரசு ஊழியர்கள், இராணுவ பணியாளர்கள், ஓய்வூதியர்கள் பலர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் 26 ஆம் திகதிவரை சில பகுதிகளில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்நாட்டு தேசிய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Recommended For You

About the Author: admin