“ராஜபக்சர்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வெளியிடும் கருத்துக்கள் குறித்து கண்டுகொள்ள தேவையில்லை.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள்ளக மோதல்களால் எமது கட்சிக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. அக்கட்சியினர்தான் எம்மை நம்பி உள்ளனர். நாம் அவர்களை நம்பி அல்லர்.
சந்திரிகா அம்மையார் ஒவ்வொறு காலத்திலும் ஒவ்வொரு அறிவிப்புகளையும் விடுத்து வருகின்றார். மைத்திரிபால சிறிசேனவை ஐக்கிய தேசியக் கட்சி பக்கம் சாய வைத்து பொது வேட்பாளராக அவரே களமிறக்கினார். ஆனால், இன்று மாறுபட்ட கருத்தை வெளியிடுகின்றார்.
ஆகவே, ராஜபக்ஷக்கள் தொடர்பிலும் அவர் வெளியிடும் கருத்துக்கள் குறித்து அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை.” – என்றார்.