இரண்டு ஜப்பானிய கடற்படை ஹெலிகொப்டர்கள் பயிற்சியின் போது கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், 7 பேர் காணாமல் போயுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு (21) அறிவித்துள்ளது.
எஸ்.எச்-60 எனும் இரண்டு ரோந்து ஹெலிகொப்டர்கள் (20) இரவு மத்திய ஜப்பானின் தெற்கு கடற்கரையில் இருந்து சுமார் 600 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டோரிஷிமா அருகில் பயிற்சில் ஈடுபட்டிருந்த நிலையில் ஹெலிகொப்டர்களின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இதன் பின்னர் ஹெலிகொப்டர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும், தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படு வருவதாகவும் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் மினோரு கிஹாரா தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்த விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், ஹெலிகொப்டர்கள் விபத்துக்குள்ளாவதற்கு முன்னதாக இரண்டும் ஒன்றுக்கொன்று அருகாமையில் பயணித்தமையால் நேருக்கு நேர் மோதியிருக்கலாம் என பாதுகாப்பு அமைச்சர் சந்தேகம் வௌியிட்டுள்ளார்.