உக்ரைன் போரில் இலங்கையர்கள் ஈடுபட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை

உக்ரைன் போரில் இலங்கையர்கள் ஈடுபட்டதாக கூறப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் அறிவித்துள்ளது.

அத்துடன், உள்ளூர் ஆட்சேர்ப்பு நிறுவனம் குறித்து எதுவும் தெரியாது எனவும் தூதரகம் அறிவித்துள்ளது.

போர் வலயத்திலிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படும் ஒருவர் இலங்கைக்குத் திரும்பியதில் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தூதரகம் மறுத்துள்ளது.

“ரஷ்யாவின் பிரதேசத்தில் இலங்கை பிரஜைகளின் நலன்கள் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பது மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்வும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேநேரம், இலங்கையர்களுக்கு கொழும்பில் உள்ள தூதரகப் பிரிவினால் விசா வழங்கப்படுவது அவசியமானது என்பதை தூதரகம் வலியுறுத்துகிறது.

விண்ணப்பதாரர்களின் செல்லுபடியாகும் ஆவணங்களின் அடிப்படையில், இராணுவ நடவடிக்கைகளுடன் எந்த தொடர்பும் இல்லாத அவர்களின் பயண இலக்குகளை தூதரகம் உறுதிப்படுத்துகிறது.

அத்தகைய நோக்கங்களைக் கொண்ட நபர்கள் ரஷ்யாவிற்கு நுழைவதைத் தடுக்க, தூதரகம் விண்ணப்பதாரர்களுடன் கூடுதல் நேர்காணல்களை நடத்துகிறது.

“இருப்பினும், இலங்கையர்கள் தங்கள் பயண இலக்கையோ அல்லது ரஷ்யாவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் தன்மையையோ மாற்ற முடிவு செய்தால், நாங்கள் அவர்களைத் தடுக்க முடியாது.

கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் இலங்கையில் உள்ள ரஷ்ய பிரஜைகளின் பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருக்கும்.

அதே வேளையில், ரஷ்யாவில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் தொடர்பான பிரச்சினைகள் மொஸ்கோவில் தொடர்புடைய இராஜதந்திர பிரதிநிதித்துவத்தின் திறனுக்குள் அடங்கும்.

இலங்கையிடமிருந்து உத்தியோகபூர்வ கோரிக்கை கிடைத்தால் மேலதிக தகவல்களை வழங்க தயாராக இருப்பதாகவும் தூதரகம் விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin