2023ஆம் ஆண்டு தாய்லாந்தின் ‘பாங்கொக்கில்’ நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 52.95 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்ற உஸ்பெகிஸ்தான் தடகள வீராங்கனை ஃபரிடா சோலியேவா ஊக்கமருந்து உட்கொண்டு போட்டியில் பங்கேற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்தப் போட்டியில் இலங்கை தங்கப் பதக்கம் வென்ற 400 மீ (பெண்கள்) போட்டியின் அதிகாரப்பூர்வ முடிவுகள் திருத்தப்பட்டுள்ள நிலையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வீராங்கனை நதிஷா ராமநாயக்க 52.61 வினாடிகளில் தங்கப் பதக்கம் வென்ற நிலையில் புதிய முடிவுகளின் திருத்தத்தால் அது பாதிக்கப்படவில்லை.
அந்த சூழ்நிலையில், அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலுக்குப் பிறகு ஃபரிடா வெள்ளிப் பதக்கத்தை இழந்த நிலையில் மூன்றாவது இடத்தைப் பிடித்த ஐஷ்சார்யா மிஷ்வாவுக்கு வழங்கப்படவுள்ளது.
மிஷா 53.07 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். அதன்படி, போட்டியில் நான்காவது இடத்தைப் பிடித்த ஜப்பானின் ஹருனா குபோயாமா, 2023 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 3வது இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்துடன் புதிய பதக்கம் வென்றார்.
2023ஆம் ஆண்டுக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் 2023ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை பாங்காக்கில் நடைபெற்ற நிலையில் 40 நாடுகள் இதில் பங்கேற்றன.
இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை, 3 தங்கப் பதக்கங்கள், 2 வெள்ளிப் பதக்கங்கள், 3 வெண்கலப் பதக்கங்களை வென்று நான்காவது இடத்தைப் பிடித்தது.