சர்வதேச மாணவர்களை உள்ளீர்ப்பதில் ஆர்வம் காட்டும் பிரான்ஸ்

2022/23 ஆம் கல்வியாண்டில் பிரான்ஸ் உயர்கல்வி நிறுவனங்களில் சுமார் 412,087 சர்வதேச மாணவர்கள் இணைந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, பிரான்ஸ் உயர்கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படும் எண்ணிக்கை கடந்த வருடம் 3 வீதம் அதிகதித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த எண்ணிக்கையானது கடந்த ஐந்து ஆண்டுகளில் 17 வீத அதிகரிப்பை காட்டுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

உலகளாவிய ரீதியில் சர்வதேச மாணவர்களை உள்வாங்கும் உயர்கல்வி நிறுவனங்களை கொண்ட நாடுகளில் பிரான்ஸ் முக்கிய பங்கு வகிக்கின்றது.

இதன்படி, 2021/22 ஆம் கல்வியாண்டு முதல் பிரான்ஸ் உயர்கல்வி நிறுவனங்களில் உள்வாங்கப்படும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை வரவேற்பது தொடர்பான பிரான்ஸ் அரசாங்கத்தின் திறந்த வெளியுறவு கொள்கையின் விளைவாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 2027 ஆம் ஆண்டுக்குள் 500,000 சர்வதேச மாணவர்களை உள்ளீர்க்கும் திட்டத்தினை பிரான்ஸ் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin