நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வெற்றியை பதிவுசெய்துள்ளதுடன், புள்ளிப்பட்டியலில் கணக்கை ஆரம்பித்துள்ளது.
மும்பை அணியின் வெற்றிக்கு ரொமாரியோ ஷெப்பர்ட் 20வது ஓவரில் பெற்றுக்கொண்ட 32 ஓட்டங்கள் பெரிதும் உதவியது. அவர் பெறும் 10 பந்துகளில் 39 ஓட்டங்களை குவித்தார்.
மற்றும் டிம் டேவில் 21 பந்துகளில் ஆட்டமிழக்காது 45 ஓட்டங்களை குவித்தார். இதன் மூலம் மும்பை அணி அதன் சொந்த மைதானத்தில் 234 ஓட்டங்களை குவித்தது.
டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆட்டமிழக்காமல் 25 பந்துகளில் 71 ஓட்டங்களை குவித்த போதிலும் டெல்லி அணியால் 205 ஓட்டங்களை மட்டுமே குவிக்க முடிந்தது. அந்த அணியில் எட்டு வீரர்கள் ஆட்டமிழந்தனர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணி விளையாடி முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது. இந்நிலையிலேயே தனது முதல் வெற்றியை மும்பை அணி பதிவுசெய்துள்ளது.
முதல் இன்னிங்ஸின் ஆட்டத்தின் இறுதி ஓவரை டெல்லி அணியின் அன்ரிச் நோர்ட்ஜே வீசியிருந்தார். அந்த ஓவரில் மட்டும் நான்கு ஆறு ஓட்டங்கள் அடங்களாக 32 ஓட்டங்கள் குவிக்கப்பட்டது.
ரோஹித் (49) மற்றும் இஷான் கிஷான் (42) என சிறந்த ஆரம்ப அடிதளத்தை அமைத்துக்கொடுத்தனர்.
காயம் காரணமாக முதல் மூன்று போட்டிகளில் விளையாடாத சூர்யகுமார் யாதவ் இந்தப் போட்டியில் ஓட்டங்கள் எதையும் பெறாமல் ஆட்டமிழந்தார்
இறுயில் மும்பை அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் 234 ஓட்டங்களை குவித்தது. வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய டெல்லி அணியின் விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் வீழ்த்தப்பட்டது.
ஸ்டப்ஸ் 19 பந்துகளில் தனது அரைசதத்தை அடித்து நம்பிக்கையளித்தார். எனினும் டெல்லி அணியால் 205 ஓட்டங்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.
போட்டியின் இறுதி ஓவரில் மட்டு மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. இந்த வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் மும்பை அணி எட்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.