நுவரெலியா பிரதான நகரில் பிரசித்தி பெற்ற தனியார் ஹோட்டல் ஒன்றில் உள்நாட்டு , வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையினால் வாகனம் தரிப்பிட வசதிகளை விரிவாக்கும் பணிக்காக வீதியோரம் உள்ள மரங்களை வெட்டுவதற்கு யார் அனுமதி வழங்கியது ? என்ற கேள்வியுடன் இதற்கு முன்னதாக இப்பகுதியில் வெட்டப்பட்ட மரங்களுக்காக தற்போது வரை ஒரு மரம் கூட நடப்படாத நிலையில் மீண்டும் மரங்களை வெட்டியதற்கு இப்பகுதிவாசிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், தன்னார்வ தொண்டு அமைப்புகளும் நுவரெலியா வர்த்தக சங்கத்தினர்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
மேலும், குறித்த பகுதியில் 2021ஆம் ஆண்டு மரங்கள் வெட்டப்பட்டதற்கு பாரிய போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வீதி விரிவாக்க பணிக்காக அதிகமான மரங்கள் வெட்டப்பட்டது.
அதனை தொடர்ந்து தற்போதுவரை ஒரு மரம் கூட நட்டு அதனை பராமரிப்பு செய்யவில்லை எனவும் அது போலவே இந்த மரங்களை வெட்டினாலும் ஒரு மரம் கூட நட போவது இல்லை என தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்க சென்ற போது முறைப்பாடினை ஏற்றுக்கொள்ள வில்லை எனவும் அதனை தொடர்ந்து நுவரெலியா மாவட்ட பிரதேச செயலாளர் இடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என வர்த்தக சங்கத்தினர் தெரிவித்தனர்.
மீண்டும் தொடர்ந்து தற்போது மரங்களை வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு மரம் வெட்டினால் 10 மரங்கள் நட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை என நுவரெலியா வர்த்தக சங்க உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அத்துடன் உயர் அதிகாரிகளுக்கு தமது எதிர்ப்பினை தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளமை குறிப்பிடத்தக்கது.