மகிழ்ச்சியில் சுவிஸ் மக்கள்

சுவிட்சர்லாந்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் இல்லாதளவு பணவீக்கம் வீழ்ச்சிக்கண்டுள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் இவ்வாறு பணவீக்கம் குறைந்துள்ளதாக சுவிஸ் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது.

2015ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் முறையாக வட்டி விகிதக் குறைப்பைச் செய்வதற்கான முடிவை சுவிஸ் அரசாங்கம் ஆதரித்தன் பிரகாரம் இவ்வாறு பணவீக்கம் குறைவடைந்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் அதன் பிராங்க் வலுவானதாக மாறியுள்ளமையே பணவீக்கம் குறைவதற்கு காரணமாகும்.

மார்ச் மாதத்தில் இறக்குமதி விலைகள் 1.3 வீதம் குறைந்துள்ளன. உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் உணவுகளில் விலைகள் குறைவடைந்துள்ளன. அடுத்த சில ஆண்டுகள் பணவீக்கம் குறைவாக இருக்கும் என்று சுவிஸ் நேஷனல் வங்கி எதிர்பார்க்கிறது.

சுவிட்சர்லாந்தில் தொடர்ந்து வீட்டு வாடகைகள் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துவந்தன.

இதனால் மக்களின் வாழ்க்கைச் செலவு ஏனைய ஐரோப்பிய நாடுகளை காட்டிலும் சுவிட்சர்லாந்தில் கடுமையாக உயர்ந்து வருவதாக மக்கள் கவலை வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில் அரசாங்கத்தின் இந்தத் தீர்மானத்தால் மீண்டும் சுவிசில் பொருட்கள் வாடகை விலைகள் குறைவடையும் என பொருளியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: admin