சாதாரண உலக நாட்காட்டியிலிருந்து பின்னோக்கி பயணிக்கும் நாட்காட்டியை கொண்ட ஒரே நாடாக எத்தியோப்பியா விளங்குகிறது என்பது எம்மில் பலருக்கு தெரியாது.
அதேபோல் , எத்தியோப்பியாவில் சாதாரண நாட்காட்டியைப் போல ஒரு வருடத்துக்கு 12 மாதங்கள் அல்ல 13 மாதங்கள் காணப்படுகின்றன.
எத்தியோப்பியாவில் உள்ள “ஆர்த்தடாக்ஸ்” தேவாலயம் கிறிஸ்து பிறந்த ஆண்டை சரியாகக் கணக்கிடாமல், தவறான ஆண்டைப் பயன்படுத்துவதே இவ்வாறு வருடங்கள் பின்னோக்கி நகரும் நாட்காட்டியைக் கொண்டிருப்பதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
எத்தியோப்பிய நாட்காட்டியின்படி, அவர்களின் புத்தாண்டு செப்டெம்பர் 11ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.
அதைவிடவும் முக்கிய விடயமாக, பூமியில் உள்ள மற்ற அனைத்து நாடுகளும் 2024ஆம் ஆண்டில் இருந்தாலும், எத்தியோப்பியா இன்னும் 2016ஆம் ஆண்டிலேயே உள்ளது என்பது ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.