பொது சின்னத்தில் களமிறங்கினால் ரணில் புரட்சியை ஏற்படுத்துவார்

“2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் இலங்கைத் தீவில் ஏற்பட்ட புரட்சியை போன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டுமொரு புரட்சியை ஏற்படுத்துவார்.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் உபத் தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

“ரணிலின் புரட்சிகரமான நடவடிக்கையை வெற்றிக்கொள்ள திரைக்கு பின்னால் பல நடவடிக்கைகள் மறைமுகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பல அமைப்புகளும், கட்சிகளும் ஜனாதிபதிக்கு தமது ஆதரவை உறுதியளித்துள்ளன.

இலங்கையில் 60 வீதத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் எந்த வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை.

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. சில அரசியல் கட்சிகள் அதிக வாக்குகளைப் பெறப்போகிறோம் என்ற மாயையில் உள்ளன.‘‘ எனவும் அகிலவிராஜ் காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேதேளை, ரணில் விக்ரமசிங்க பொதுச் சின்னத்தில் பொது வேட்பாளராகப் போட்டியிட்டால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும் வாய்ப்பு அவருக்கு அதிகமாக காணப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 80-90 வீதமானவர்கள் ஜனாதிபதியை ஆதரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: admin