ஞானசார தேரருக்கு பிணை மறுப்பு

4 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள வணக்கத்துக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்கக் கோரிய கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஞானசார தேரருக்கு தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே இந்தத் தீர்மானத்தை வழங்கியுள்ளார்.

தற்போது விதிக்கப்பட்டுள்ள 4 வருட சிறைத் தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், பிரதிவாதி ஞானசார தேரரை பிணையில் விடுவிக்குமாறு கோரி அவரது சட்டத்தரணிகள் இந்த பிணை கோரிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்திருந்த​மை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: admin