உலகளாவிய ரீதியில் சாதனை படைத்துள்ள கிரிகெட் ஜாம்பவான்களுக்கு மத்தியில் மிகவும் குறுகிக காலத்தில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி கொண்டவர் தான் விராட் கோலி.
இவர் பல சாதனைகளை படைத்துவிட்ட போதிலும் இதற்கிடையில் தற்போது அடுத்த சாதனைக்கும் அடித்தளமிட்டுள்ளார் விராட்.
புதிய சாதனைக்கான எதிர்பார்ப்பு
தற்போது மிகவும் பரபரப்பாக இடம்பெற்றுவரும் ஐ.பி.எல் 2024 போட்டிகளில் இவர் தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்திவருகின்றார். அந்த வகையில், டி20யில் ஒரு அணிக்காக 8000 ரன்களை கடந்த உலகின் முதல் வீரர் என்ற பெருமையை பெற விராட் கோலிக்கு இன்னும் இருப்பது 132 ரன்கள் மாத்திரமே.
ஆகவே, குறித்த சாதனையை அவரின் ரசிகர்களும் வரவேற்கும் முகமாக சமூக வலைத்தளங்களில் பல போஸ்ட்டுக்களை உருவாக்கி உட்சாகப்படுத்தி வருகின்றனர்.
இந்த ஐ.பி.எல் போட்டிகளில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விராட் கோலி களமிறங்குகிறார்.
ஐ.பி.எல்லில் இவருடைய சாதனைகள் எண்ணிலடங்காதவை
தற்போதைய நிலவரப்படி, 2008 முதல் ரோயல் சேலன்சர்ஸ் அணியுடன் இணைந்திருக்கும் விராட், 255 போட்டிகளில் 7868 ஓட்டங்களை எடுத்துள்ளார்.
பெங்களூரு அணிக்காக 8000 ரன்களைக் கடக்க அவருக்கு இன்னும் 132 ரன்கள் மாத்திரமே தேவை.
2008 இல் ரோயல் செலன்சர்ஸ்க்காக அறிமுகமானதில் இருந்து, விராத், 240 ஐ.பி.எல் போட்டிகளில் 7444 ரன்கள் எடுத்துள்ளார். மற்றும் சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடிய 15 போட்டிகளில் மொத்தம் 424 ரன்கள் குவித்துள்ளார்.
தற்போது ஐ.பி.எல் போட்டி இடம்பெற்றுவரும் எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் 3276 ரன்களை அடித்ததற்காக உலக சாதனை படைத்தார்.
ஐ.பி.எல் வரலாற்றில் எல்லா நேரத்திலும் அதிக ரன்கள் எடுத்தவர் மற்றும் உலகின் பணக்கார உரிமையாளர் கிரிக்கெட் லீக்கில் ஏழு சதங்கள் அடித்த ஒரே வீரர் விராட் கோலி ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.