தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் பாரிய காட்டுத்தீவு பரவல் ஏற்பட்டுள்ளது.நேற்றைய தினம் வெளியிடப்பட்ட தகவலில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
மேலும் காலநிலை மாற்றம் மேசன் மழைக் காடுகளையும் பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.கடந்த ஜனவரியிலிருந்து மார்ச் மாதம் வரை பெற்றப்பட்ட செய்மதி தகவல்களின் பிரகாரம் 30200 இடங்களில் தீ பரவியுள்ளது.
வெனிசுலாவில் ஏற்பட்ட தீப் பரம்பல் காரணமாக எதிர்வரும் கொடை காலத்தில் பாதிப்புக்கள் ஏற்படலாம் என ஆராய்ச்சியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை கடந்த 1999 ஆம் ஆண்டு பாரியளவில் தீ பரவல் ஏற்பட்டிருந்தது. விவசாய நோக்கத்திற்காக மனிதர்களினால் ஏற்படுத்தப்படும் தீ காரணமாக அதிக வெப்பம் மற்றும் வறட்சி நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மழை வீழ்ச்சி குறைவடைந்துள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கு தகுந்த திட்டங்கள் வகுக்கப்படுவதில்லை என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த சில மாதங்களில் பெய்த மழை காரணமாக மேசன் காடுகள் புத்துயிர் பெற்றதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.