சொந்த மைதானத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு வந்த சோதனை

இந்திய பிரீமியர் லீக்கின் இந்த பருவக்காலத்துக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக ஹர்திக் பாண்டியா செயல்படுகிறார்.

இவரை அணியின் நிர்வாகம் பெருந்தொகைக்கு வாங்கியிருந்தது.

ரோஹித் சர்மாவிடமிருந்து அணித் தலைவர் பதவி பறிக்கப்பட்டு ஹர்திக் பாண்டியாவுக்கு வழங்கப்பட்டது முதல் மும்பை அணிக்குள் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

ரசிகர்களையும் இந்த விடயம் விட்டுவைக்கவில்லை. முதல் இரண்டு போட்டிகளில் பாண்டியாவின் செயல்பாடுகள் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தன.

குறிப்பாக ரோஹித் சர்மாவையும் ஜஸ்பிரித் பும்ராவையும் அவர் நடத்திய விதம் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் கேளிக்கைகளுக்கும் கிண்டல்களுக்கும் பாண்டியா உள்ளானார்.

இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற போட்டியிலும் மும்பை அணி தோல்வியை சந்தித்தது. இதனால், ரசிகர்கள் பாண்டியாவுக்கு எதிராக மும்பை மைதானத்தில் கூச்சல் சத்தங்களை எழுப்பினர்.

நடுவர்கள் இவ்வாறு கூச்சலிட வேண்டாம் எனக் கூறியும் ரசிகர்கள் இதனை கண்டுகொள்ளாது கூச்சலிட்டனர்.

மும்பை அணியின் சொந்த மைதானத்தில் அணியின் தலைவர் அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

நேற்றைய போட்டியில் 125 ஓட்டங்களை மாத்திரமே மும்பை அணி பெற்றது. இதனால் இலகுவான ஓட்ட இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய டெல்லி கெபிட்டல்ஸ் அணி, 16ஆவது ஓவரில் வெற்றி இலக்கை அடைந்தது.

Recommended For You

About the Author: admin