இஸ்ரேலிய போர் விமானங்கள் நேற்று திங்கட்கிழமை சிரியாவில் உள்ள ஈரானின் தூதரகத்தின் மீது குண்டு தாக்குதல் நடத்தியுள்ளன.
இந்த நடவடிக்கை இஸ்ரேலை அதன் பிராந்திய எதிரிகளுக்கு எதிரான போரில் தீவிரப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் மூன்று மூத்த தளபதிகள் உட்பட ஏழு இராணுவ ஆலோசகர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
“டமாஸ்கஸில் உள்ள ஈரான் துணை தூதரக கட்டிடத்தை குறிவைத்து நடத்தப்பட்டுள்ள தாக்குதலில் ஏராளமான அப்பாவிகளை கொன்ற இந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்” என்று சிரியாவின் வெளியுறவு அமைச்சர் பைசல் மெக்தாத் கூறினார்.
இஸ்ரேல் நீண்டகாலமாக சிரியாவில் உள்ள ஈரானின் இராணுவ நிலைகளையும் அதன் ஆதரவு தரப்பினரின் இராணுவ தளங்களையும் குறிவைத்து வருகிறது.
காசா பகுதியில் ஈரான் ஆதரவு படையாக கருதப்படும் பாலஸ்தீனிய ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி தாக்குதல்களை தொடக்க ஆரம்பித்தது.
காசா போர் வெடித்ததில் இருந்து, இஸ்ரேலின் இராணுவம் சிரியாவில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரப் படை மற்றும் ஈரானிய ஆதரவு லெபனான் ஆயுதக் குழுவான ஹெஸ்பொல்லாவுக்கு எதிராக சிரியாவில் வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்தப் பின்புலத்திலேயே தற்போது தெஹ்ரானிலும் இஸ்ரேல் தாக்குதல்களை தொடுத்து வருகிறது.
இஸ்ரேல் சிரியாவில் தாக்குதல்களை நடத்தி வருவதால் இப்பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.