அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடையே எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் பிளவு ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சிகள் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை மேலும் உறுதிப்படுத்துவது வகையிலே, அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதிநிதிகளை கட்சியின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எதிர்காலத்தில் எதிர்க்கட்சி அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதில் இருந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏப்ரல் மாத இறுதியில் விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவைத் தவிர ஏனைய உறுப்பினர்களுடன் சுயாதீனமாக செயற்படுவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த தீர்மானத்திற்கு பெரும்பாலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் தரப்பினர் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளதாக தெரியவருகிறது.
இருப்பினும், தற்போதைய நிலவரப்படி எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் ஆளும் கட்சி பிளவுபடும் என நம்பப்படுகிறது.