மைத்திரி கருத்து: இராஜதந்திர நெருக்கடியை ஏற்படுத்துமா?

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதலுடன் இந்தியாவை தொடர்புபடுத்தும் சர்ச்சைக்குரிய கருத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குற்றஞ்சாட்டியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இந்தியா இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதாக தேசிய நாளிதழொன்றை மேற்கோள் காட்டி அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அத்துடன், இது பொறுப்பற்ற கருத்து எனவும், அத்தகைய அறிக்கையை வெளியிடுவதற்கு அவரிடம் ஆதாரம் இருக்க வேண்டும் எனவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முன்னாள் ஜனாதிபதியின் இந்த கருத்து இராஜதந்திர நெருக்கடியை உருவாக்கலாம் எனவும் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியவர்கள் குறித்து தாம் அறிந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததை அடுத்து, குற்றப்புலனாய்வு திணைக்களம் அவரிடம் 5 மணிநேர வாக்குமூலத்தினை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin