கிளிநொச்சி மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்னர் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் இராவணன் பயன்படுத்திய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக புகைப்படங்களுடன் செய்தியொன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது.
இந்த செய்தி தொடர்பில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் செய்தி சரிபார்ப்பு தளத்தால் (factseeker) ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு குறித்த புகைப்படங்கள் போலியானவையாக கண்டறியப்பட்டுள்ளது.
” கிளிநொச்சியில் அகழ்வாராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாம். அத்தோடு இவை இராவணனின் பயன்படுத்தியாக கருதப்படுகிறது. இவை இராவணன் பயன்படுத்திய புட்பக விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என்று கருத்படுகிறதாம். இதனை ஆராய்வதற்காக ஜப்பானிய தொல்பொருள் ஆய்வாளர்கள் வருகிறாராகளாம்.
அவர்களோடு இலங்கை தொல்பொருள் திணைக்களமும் சிங்கள் தோல்பொருள் ஆய்வாளர்களும் இணைந்து கொள்கிறார்கள். இராவணின் கோட்டையாக இருந்த சிகிரியா சிங்கள மரபுரிமை சின்னமாக மாற்றியது மட்டுமல்லாமல் இராவணன் சிங்கள மன்னன் என்று வரலாற்றை மடை மாற்றிக் கொண்டு உள்ள சிங்கள பேரினவாதம் அடுத்து என்ன கதை உருவாக்க போகிறதோ?”
இவ்வாறு, சிங்கள செய்தியொன்றை மேற்கோள்காட்டியே குறித்த பதிவானது முகப்புத்தகம் மற்றும் எக்ஸ் தளத்திலும் அதேபோல் யூடியுப்பில் காணொளி வடிவிலும் பகிரப்பட்டு வருகின்றது.
இதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தும் விதமாக இச்செய்தி குறித்து பத்திரகை ஸ்தாபனத்தின் செய்தி சரிபார்க்கும் தளம் ஆராய்ந்து பார்த்ததில் இது AI தொழினுட்பத்தின் மூலமாக உருவாக்கப்பட்ட போலியான புகைப்படங்கள் என்பதை கண்டறிந்துள்ளது.