2ஆவது திருமணமா? மீனா வெளியிட்ட தகவல்!

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா, தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோக்கள் ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

பின்னர் தொழிலதிபர் வித்யாசாகரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

2022ல் வித்யா சாகர் மரணமடைந்த பின்னர் அதன்பிறகு மீனா இரண்டாவது திருமணத்துக்கு தயாராகி உள்ளார் என்றும், ஒரு நடிகருடன் இணைத்தும் சமூக வலைத்தளத்தில் தகவல்கள் பரவின.

எனினும்,  இரண்டாவது திருமணம் பற்றி சிந்திக்கவில்லை என்று அவர் பலமுறை விளக்கம் அளித்தும் வதந்திகள் ஓய்ந்தபாடு இல்லை.

இதையடுத்து வதந்திகளுக்கு மீனா கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “சமூக வலைத்தளத்தில் உண்மைகளை சொல்லுங்கள். அதுதான் நல்லது. நாட்டில் என்னைப்போல் தனிமையில் வாழும் பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

அவர்களின் பெற்றோர் மற்றும் குழந்தைகள் பற்றி யோசியுங்கள். தற்போதைக்கு எனக்கு இரண்டாவது திருமணம் பற்றி எந்த சிந்தனையும் இல்லை. எதிர்கால முடிவு பற்றி இப்போது எப்படி சொல்ல முடியும்.

எனவே இரண்டாவது திருமணம் என்று வெளியாகும் வதந்திகளை யாரும் கண்டு கொள்ள வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: admin