பாலின உறவுக்கான வயது வரம்பை 14 ஆக குறைப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை மீளாய்வு செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற இலங்கைப் பெண்களின் வலுவான கோரிக்கையை அவர் எடுத்துரைத்தார்.
தண்டனைச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தம், ஆண்களுக்கும் பெண்களுக்கும் துஷ்பிரயோகம் தொடர்பான சட்டங்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வயது வரம்பு 14 ஆகக் குறைப்பு
குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அந்த சட்டமூலத்தின் ஊடாக நாட்டில் பாலியல் வன்முறை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களை பரப்புவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாகவும் தேசிய அமைப்புகள் ஒன்றிணைந்து குற்றம் சுமத்தியுள்ளன.
இந்தச் சட்டமூலம் நாட்டில் சிறுவர் துஷ்பிரயோகங்களை ஊக்குவிக்க முயற்சிப்பதாக தேசிய அமைப்புகளின் ஒன்றியம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய தேசப்பற்றுள்ள இயக்கத்தின் பொதுச் செயலாளர் வசந்த பண்டார தெரிவித்தார்.
1995ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட குற்றவியல் சட்டத் திருத்தத்தின் பிரகாரம் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் தாமாக முன்வந்து பாலியல் உறவில் ஈடுபட்டாலும் அது பலாத்காரப் பிரிவின் கீழ் வரும் பாரிய குற்றமாகும் (statuary rape) என்பதை அடிப்படையாக கொண்டு நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ வயது வரம்பை 14 ஆகக் குறைத்துள்ளார்.
தற்போது குறித்த விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன், நாட்டில் விபச்சாரத்துக்கு