இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய இழுவை படகுகள் மற்றும் மீனவர்களை இலங்கை கடற்படை கைதுசெய்துள்ளது.
யாழ்ப்பாணம், நெடுந்தீவு அருகே இன்று சட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த 21 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களது இரு விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கைதான 21 மீனவர்களும் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் என இந்திய ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
மீனவப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வுக்காண வேண்டும் என தமிழக அரசு, மத்திய அரசை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது.
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதற்கு எதிராக தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் 80 இற்க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக மீனவர்களின் தொடர் கைது நடவடிக்கைகள் இரு நாட்டு அரசியல் நகர்வுகளிலும் பிரச்சினைகளை விளைவுக்கும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.