இலங்கையில் வாழ்ந்த கடைசி ஆண் வரிக்குதிரை உயிரிழந்தது

இலங்கையில் வாழ்ந்த கடைசி ஆண் வரிக்குதிரை உயிரிழந்துள்ளதாக தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலை தெரிவித்துள்ளது.

ரிதியகம பூங்காவில் இருந்து இனப்பெருக்கத்திற்காக இந்த வரிக்குதிரையை தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலைக்கு கொண்டு வந்துள்ளனர்.

தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு விலங்குகளை கொண்டு வரும்போது அதிக அளவு தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.

இந்த வரிக்குதிரைக்கும் அதிக தடுப்பூசி செலுத்தப்பட்டதாலேயே உயிரிழந்திருக்க கூடும் என தெஹிவளை மிருகக்காட்சிசாலை ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இலங்கையில் மிகவும் அரிதாக வாழும் உயிரினங்களில் வரிக்குதிரையும் ஒன்றும்.

வரிக்குதிரையின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க கடந்த காலத்தில் அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டது.

அதன் அடிப்படையில்தான் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசால வரிக்குதிரைகளின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் கடேசி ஆண் வரிக்குதிரை உயிரிழந்துள்ளதால் எதிர்காலத்தில் வரிக்குதிரை இனம் இலங்கையில் அழிந்துவிடும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: admin