வவுனியா, வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி வழிபாட்டின் போது, கைது செய்யப்பட்டவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக குறித்த வழக்கில் முன்னிலையான சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட எட்டுபேர் மீதும் எந்தவிதமான தவறும் கிடையாது என்பதுடன், அவர்களுக்கு நீதி கிடைக்கின்றவரை தாம் தொடர்ச்சியாகப் போராடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த வழக்கு பெரும் சட்டப்போராட்டமாகவே அமைந்திருப்பதாகவும், சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தொல்லியல் சின்னங்களிற்கு சேதத்தினை ஏற்படுத்தியதாக தொல்லியல் திணைக்களத்தால் நீதிமன்றில் உண்மைக்கு புறம்பான பொய்யான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உண்மையில் அவ்வாறான எத்தகைய சேதங்களும் ஏற்பட்டிருக்கவில்லை. அதனை தாம் மேன்முறையீட்டின் போது நிரூபிப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.