கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ஓப்பன்ஹெய்மர் (Oppenheimer) படம் பல பிரிவுகளில் ஒஸ்கார் விருதை (Oscars 2024) வென்றுள்ளது.
அணு ஆயுதத்தை முதல் முறையாக கண்டுபிடித்த ரொபர்ட் ஜே ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கையை மையமாக வைத்து எழுதப்பட்ட புத்தகத்தை தழுவி இப்படம் எடுக்கப்பட்டது.
கிலியன் மர்ஃபி, ஃப்ளோரன்ஸ் பியூ, ரோபர்ட் டெளனி ஜூனியர், எமிலி பிளண்ட் உட்பட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.
இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு ஒஸ்கார் விருது விழாவில் சிறந்த படம், நடிகர், இயக்குநர், துணை நடிகர்இ படத்தொகுப்பு, ஒளிப்பதிவு, இசை ஆகிய 7 பிரிவுகளில் விருதுகளை ஓப்பன்ஹெய்மர் (ழுppநnhநiஅநச) திடைப்படம் வென்றுள்ளது.