இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவு செய்யப்பட வீதி விபத்துகளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
விபத்துக்களின் விபரம் வருமாறு…
பெலியத்த – தங்கல்ல வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிட்டினமலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன், பெட்டகொடு-பஸ்தியான் மாவத்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தெஹிவளையைச் சேர்ந்த 74 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 24 மணித்தியாலங்களில் தீவின் பல்வேறு பகுதிகளில் 7 விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்துக்களில் 07 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று (04) காலை எல்ல – ஹாலிஎல, பெரகல வீதியில் மில்லகம சந்திக்கு அருகில் பதுளையிலிருந்து பண்டாரவளை நோக்கிச் சென்ற வேன் ஒன்று பாதசாரிக் கடவையைக் கடந்த ஒருவர் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
ஹெல ஹல்பே, கந்தேகும்புர பகுதியைச் சேர்ந்த 89 வயதுடைய ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், நவகமுவ – கொரதொர, வடுரமுல்ல வீதியில் கொங்கஹஹேன பிரதேசத்தில் பாதசாரி கடவையை கடத்திச் சென்ற பெண் மீது கொரத்தோட்டையிலிருந்து வதுரம்முல்லை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி மோதியதில் கடுவெல கொரதொட்டையைச் சேர்ந்த 55 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு பெலியத்த – தங்கல்ல வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிட்டினமலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன், பெட்டகொடு-பஸ்தியான் மாவத்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தெஹிவளையைச் சேர்ந்த 74 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், களுவாஞ்சிகுடி பகுதியில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் எருவில் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று பிற்பகல் கொழும்பு – மட்டக்களப்பு வீதியின் ஹிஹ்கஹஹேன பகுதியில் முச்சக்கரவண்டியுடன் லொறியொன்று மோதியதில் முச்சக்கரவண்டி வீதியில் கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் பின்னால் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
தலாவ பிரதேசத்தில் பாதெனிய அனுராதபுரம் வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஒன்றின் பின்னால் பயணித்த கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
2023ஆம் ஆண்டு 22,804 வீதி விபத்துக்கள் பதிவு
2023 வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 22,804 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளது. இந்த விபத்துக்களில் 2,280 பேர் உயிரிழந்துள்ளதுடன், 5,206 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
2024 ஜனவரி மாத விபத்துக்கள் விபரம்
2024 ஜனவரி ஆரம்பம் முதல் 25 நாட்களில் சாலை விபத்துகளில் 136 பேர் உயிரிழந்திருந்தனர்.
இந்த காலப்பகுதியில் 1,189 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும், அவற்றில் 130 விபத்துக்கள் உயிரிழப்பதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.