பிரித்தானியாவில் தீவிரவாதம் மற்றும் குற்றச்செயல்கள் அதிகரித்துவருதாக பிரதமர் ரிஷி சுனக் அச்சம் வெளியிட்டுள்ளார்.
நாட்டின் கட்டியேழுப்படும் பல்லின, பல்சமூக நம்பிக்கை மற்றும் ஜனநாயம் என்பன குறைத்து மதிப்பிடப்படுவதாகவும் பிரதமர் கவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களில், அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் வன்முறைச் சம்பவங்களும் குற்றச் செயல்களும் அதிகரித்துள்ளதாகவும், பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை நாம் அயல் நாடுகளை நேசிக்கும் பண்பு கொண்டவர்கள், அந்த வகையில் பிரித்தானியர்களாய் ஒன்றிணைய வேண்டும் எனவும் பிரதமர் ரிஷி குறிப்பிட்டுள்ளார்.
உலக நாடுகளில் பல்லின ஜனநாயகத்தை கட்டியேழிப்பிய எமது இலக்கை குறைத்து மதிப்பிடப்படுவதாகவும், அதற்கு பிரித்தானிய பிரஜைகள் இடம்கொடுக்கக் கூடாது எனவும் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.