சாந்தனின் நினைவேந்தலை ஜனநாயக ரீதியாக அனுஷ்டிக்க இடமளிக்க வேண்டும்

சாந்தனின் நினைவேந்தலை ஜனநாயக ரீதியாக அனுஷ்டிப்பதற்கு அரசாங்கமும், பொலிசாரும் இடமளிக்க வேண்டும் என போராளிகள் நலன்புரிச் சங்க தலைவரும், முன்னாள் அரசியல் கைதியுமான செல்வநாயகம் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியா ஊடக அமையத்தில் இன்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியாவில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 33 ஆண்டுகள் சிறையில் இருந்து தற்போது இந்திய அரசால் சட்டப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட சாந்தனின் உடலத்தை விமான நிலையத்தில் பெற்றுக் கொள்ள முடியாத இழுபறி நிலையில் இருந்தது.

இது கூட இந்திய -இலங்கை அரசாங்கங்களின் திட்டமிட்ட ஒரு நடவடிக்கை.

அதேவேளை, பூதவுடல் இன்று (01) இரவு வவுனியாவுக்கு கொண்டுவரப்படுமாக இருந்தால் நாளைய தினம் (02) அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்படும்.

வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தொடர்ந்தும் போராளிகள் நலன்புரிசங்கத்திற்கு எதிராக அல்லது போராளிகளுக்கு எதிராக செயற்படுவதாக நாங்கள் உணர்கிறோம்.

இது இலங்கை அரசாங்கத்தின் தோல்வியாக கருதுகின்றோம்.

ஜனநாயக ரீதியில் பொலிஸ் மற்றும் இராணுவதற்திற்கு அறிவித்து விட்டு சாந்தன் அண்ணாவின் அஞ்சலி நிகழ்வுக்கான பதாதைகளை வவுனியா நகரில் காட்சிப்படுத்தியிருந்தோம்.

நகரில் நின்ற போக்குவரத்து பொலிசார் இது தொடர்பில் வினவி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் சென்று பேசுமாறு கூறினார்கள். அப்போது நாம் அவருக்கு தெரியப்படுத்தி விட்டு தான் கட்டுகின்றோம் என்றேன்.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் தெரிவித்த போது அவர் விருப்பமில்லாத நிலையில் தான் எம்மை பதாதைதகளை கட்ட அனுமதித்தார்.

ஜனநாயக ரீதியாக அரசியல் செய்யவும் எமது மக்களது பிரச்சனைகளை பேசுவதற்கும், பொது பிரச்சனைகளில் பங்காற்றுவதற்கும் எமக்கு அனுமதி வேண்டும்.

பொலிசாரோ, இராணுவமோ இதற்கு தடையை ஏற்படுத்த வேணடாம்.

சாந்தன் அண்ணாவின் நினைவேந்தலை ஜனநாயக ரீதியான அனுஷ்டிப்பதற்கும் பொலிசார் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதுடன், அரசாங்கமும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் – என்றார்

Recommended For You

About the Author: admin