சிறைச்சாலையில் மர்மமான முறையில் உயிரிழந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலக்ஸி நவல்னியின் பூதவுடல் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நல்லடக்கம் செய்யப்படும் என அறிக்கப்படுகின்றது.
இறுதி ஊர்வலத்தில் வன்முறைகளை வெடிப்பதை கட்டுப்படுத்தும் வகையில் மொஸ்கோ நகரில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமது 47 வயதில் உயிரிழந்த அலக்ஸி நவல்னி உடல், ஏழு நாட்களின் பின்னர் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
இதேவேளை ஆயிரக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளவுள்ள நிலையில் அனர்த்தங்கள் ஏதும் ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுவதாக அலக்ஸி நவல்னியின் மனைவி கவலை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை அலக்ஸி நவல்னி மரணம் அரசியல் படுகொலை எனவும், இதற்கு ரஷ்ய ஜனாதிபதி புட்டின் பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.