பாலஸ்தீனிய சுகாதார பணியாளர்களை இஸ்ரேல் இராணுவம் நேற்று வியாழக்கிழமை சுட்டுக்கொன்றுள்ளதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
காசாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக காத்திருந்தவர்களே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.
இதன்போது 112 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 280 பேர் காயமடைந்துள்ளதாக பலஸ்தினிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஒரே வாரத்தில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தாக்குதல் சம்பவமானது சமாதான பேச்சுவார்த்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என ஹமாஸ் அமைப்பு எச்சரிக்கைவிடுத்துள்ளது.
இதேவேளை குறித்த சம்பவம், சமாதான பேச்சுவார்த்தைக்கு பாதிப்பை ஏற்படுத்துமான என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் கேட்ட போது, பாதிப்பை ஏற்படுத்தலாம் என பதிலளித்துள்ளார்.
கடந்த ஐந்து மாதங்களில் இதுவரை 30000 வரை காசாவில் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்தவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகளை வழங்குவதில் சிக்கல்கள் காணப்படுவதாகவும் சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.