யாழ்ப்பாணம் – சேந்தாங்குளம் பகுதியைச் சேர்ந்த பாக்கியநாதன் டேவிட் டாலின்சன் என்ற சிறுவன் அபுதாபியில் நடைபெற்ற சர்வதேச ரீதியிலான உதைபந்தாட்ட போட்டியில் பங்குபற்றி சாதனை படைத்து யாழ். மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
டுபாய், அபுதாபியில் கடந்த 15 ஆம் திகதி சர்வதேச ரீதியிலான உதைபந்தாட்ட போட்டி நடைபெற்றது.
இதன்போது நடைபெற்ற பந்து கட்டுப்பாட்டு (ball control) போட்டியில் கலந்து கொண்டு, கீழே பந்தை தவறவிடாமல் பந்தை கட்டுப்படுத்தி முதலாம் இடத்தினையும் பெற்றார்.
15 கழகங்கள் பங்குபற்றிய இப்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய ஒரே தமிழன் என்ற பெருமையையும் தன்வசப்புடுத்தியுள்ளார்.
குறித்த போட்டியில் பாக்கியநாதன் டேவிட் டாலின்சன் பிரதிநிதித்துவப் படுத்திய இலங்கை அணி மூன்றாம் இடத்தை பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும், இப்போட்டியில் சிறப்பாக செயற்பட்டமைக்காக லண்டன் காற்பந்து வீரரான ரூபென் டியாஸ் தனது கையெழுத்திட்ட சட்டையையும் பரிசாக வழங்கிவைத்தார்.
தாயகம் திரும்பிய பாக்கியநாதன் டேவிட் டாலின்சனுக்கு பல தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.