மூடநம்பிக்கையினால் அமெரிக்க முதலையின் வயிற்றிலிருந்த 70 நாணயங்கள்!

பொதுவாகவே உயிரியல் பூங்காவில் வளர்க்கப்படும் உயிரினங்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

அந்த வகையில் அமெரிக்காவில் ஹென்றி டோர்லி என்ற உயிரியல் பூங்காவில் விலங்குகளுக்கு இரத்தப் பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

அவ்வாறு பார்த்ததில் 36 வயதான ‘திபோடாக்ஸ்’ என்ற முதலையின் வயிற்றில் உலோகம் இருப்பது தெரிய வந்துள்ளது.

அதனைத்தொடர்ந்து முதலைக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு வயிற்றுக்குள் கேமராவின் உதவியுடன் சுமார் 70 அமெரிக்க நாணயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அது வெற்றிகரமாக எடுக்கப்பட்டது.

எப்படி முதலையின் வயிற்றில் இந்த நாணயங்கள் வந்தது என முதலைக்குச் சிகிச்சையளித்த கால்நடை மருத்துவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

“பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் முதலை இருக்கும் நீரில் நாணயங்களைப் போடுகிறார்கள். தொட்டியில் போடப்பட்ட இந்த நாணயங்களை முதலைகள் விழுங்குகின்றன”.

இவ்வாறு தண்ணீரில் நாணயங்களைப் போட்டு வேண்டிக்கொண்டால், நினைத்தது நடக்கும் என்ற மூட நம்பிக்கையில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக கூறப்படுகிறது.

Recommended For You

About the Author: admin