சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் டிக்டொக்,இன்ஸ்டாகிராம் போன்ற சமூக தளங்களில் கணக்கு வைத்திருப்பதை தடை செய்யும் சட்டமூலம் மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் மூலம் அமெரிக்காவில் சிறுவர்களை சமூக ஊடகங்களிடம் இருந்து விலக்கி வைக்கும் முதல் மாநிலமாக புளோரிடா மாறியுள்ளது.

கடந்த 22 ஆம் திகதி நடைமுறைக்கு வந்துள்ள இந்த புதிய சட்டத்திற்கு அமைய மேற்படி சமூக வலைத்தளங்களில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கணக்குகளை ஆரம்பிப்பதை தடுக்க வேண்டும் என்பதுடன் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வயதினரின் கணக்குகளை முடக்க வேண்டும்.

விசேட அம்சங்கள் கொண்ட முகநூல், இன்ஸ்டாகிராம், ஸ்னாப் சேட், டிக்டொக், யூடியூப் உள்ளிட்ட செயலிகள் மற்றும் தளங்களுக்கும் இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்கள் சிறார்களுக்கு எதிரான ஒன்றென கருதுவதாகவும் பெற்றோரின் மேற்பார்வையில், சிறார்கள் அவற்றை பயன்படுத்தினால், நான் ஏற்படும் என நம்புவதாகவும் புளோரிடா மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எது எப்படி இருந்த போதிலும் மாநிலத்தில் நடைமுறைக்கு வந்துள்ள இந்த புதிய சட்டத்திற்கு மனித உரிமை குழுக்கள் மற்றும் தொழிற்நுட்ப நிறுவனங்களும் எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளன.

சமூக ஊடக பயன்பாடு இன்றி சிறார்கள் தமது உறவினர்கள், நண்பர்களை எவ்வாறு தொடர்புக்கொள்வார்கள் என அந்த நிறுவனங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

Recommended For You

About the Author: admin