ரஷ்யா மீது அமெரிக்கா மேலும் பொருளாதார தடை

ரஷ்யாவின் மீது மேலும் பல பொருளாதார தடைகளை அமெரிக்கா விதிக்கவுள்ளதாக திறைசேரியின் பிரதித் தலைவர் வொலி அடேஜிமோ ரொயிட்டஸ் ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையானது ஏனைய கூட்டணி நாடுகளுடன் இணைந்து மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய இராணுவ உற்பத்தி தொழிற்துறை மற்றும் வேறுநாடுகளில் அமையப்பெற்றுள்ள உற்பத்தி தொழிற்சாலைகளை இலக்கு வைத்து சுமார் 500 மேற்பட்ட விடயங்களுக்கு தடைவிக்கவுள்ளதாக வொலி அடேஜிமோ மேலும் குறிப்பிட்டிருந்தார்.

ரஷ்யா, உக்ரையின் மீது போர் தொடுத்து சுமார் இரண்டு வருடங்கள் ஆகியுள்ள நிலையில் மேலும் பொருளாதார தடை விதிக்கப்படவுள்ளது.

இத்தகைய பொருளாதார அடைகள் ஊடாக ரஷ்யாவின் பொருளாதாரத்தினை வீழ்த்த முடியும் எனவும் அடேஜிமோ சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை எதிர்கட்சித் தலைவர் அலக்சி நவல்னியின் மரணத்திற்கு ஜனாதிபதி புட்டின் பொறுப்பு ஏற்க வேண்டும் எனவும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: admin