வேலை செய்வோரை ஜப்பானுக்கு ஈர்க்க அந்நாடு சிறப்பு ஆறு மாத விசாவை அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த விசா மார்ச் மாத இறுதியிலிருந்து நடைமுறைக்கு வரவுள்ளது.
சிங்கப்பூர், அமெரிக்கா, அவுஸ்திரேலியா உட்பட 49 நாடுகளைச் சேர்ந்த தனிநபர்கள் இந்த விசாவுக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று ஜப்பான் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.
தகுதியான நாடுகளின் பட்டியலில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான ஆர்மீனியா, பெலாரஸ், ஜார்ஜியா, ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன், மால்டோவா, மொனாக்கோ, வடக்கு மாசிடோனியா, நோர்வே, செர்பியா, சுவிட்சர்லாந்து, துருக்கி மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவை அடங்கும் என்று Euronews தெரிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச ஆண்டு வருமானம் 10 மில்லியன் யென் (S$90,000) ஆக இருக்க வேண்டும்.
அத்துடன், அவர்களுக்கெனத் தனிப்பட்ட காப்புறுதித் திட்டமும் இருக்க வேண்டும்.
சொந்த தொழில் செய்பவர்களும் மனைவி/கணவர் மற்றும் பிள்ளைகளைக் கொண்டவர்களும் இந்த விசாவுக்குத் தகுதி பெறுகின்றனர்.
இந்த விசா வைத்திருப்பவர்கள் ஜப்பானில் எந்த ஒரு பகுதியிலிருந்தும் வசித்து, தொலைதூரத்திலிருந்து வேலை செய்யலாம்.
இருப்பினும், இந்தச் சிறப்பு விசாவை வைத்திருப்பவர்கள் ஜப்பானிய நிரந்தரவாசம் பெற தகுதி பெற மாட்டார். அதற்கான நடைமுறைகளும் உள்ளன.
இந்தப்பட்டியலில் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.