தற்போது அனைவரினதும் பொழுதுபோக்கு அம்சமாக யூடியூப் தளம் விளங்குகிறது. வீடியோக்கள் பார்ப்பது, சுயமாக வீடியோக்கள் செய்து அப்லோட் செய்வது போன்ற பல விடயங்களை செய்கின்றனர்.
யூடியூப் பயனர்களின் வசதிகளுக்காக அவ்வப்போது பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தும். குறிப்பாக, ஹம்மிங், யூடியூப்பில் ஒரு பாடலை டார்க் மோடில் பார்ப்பது போன்ற அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அந்த வகையில் பயனர் அனுபவத்தை மேம்படுத்தக்கூடிய ஆம்பியன்ட் மோட் இந்த அம்சங்களில் ஒன்று.
யூடியூப் ஆம்பியன்ட் மோட் என்றால் என்ன?
வீடியோ காணும் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் உண்டாகக்கூடிய லைட்டிங் விளைவு ஆம்பியன்ட் மோட் எனப்படுகிறது. இந்த அம்சமானது, இருட்டான அறையில் அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பது போன்ற விளைவை ஏற்படுத்துகிறது.
இந்த அம்சமானது 2022இல் அறிமுகமானது.
இந்த ஆம்பியன்ட் மோடை எப்படி எனபிள் செய்வது?
முதலில் டார்க் மோடை எனபிள் செய்ய வேண்டும். நீங்கள் டார்க் மோடை எனபிள் செய்தவுடனேயே தானாகவே ஆம்பியன்ட் மோட் எனபிள் ஆகிவிடும்.
இதனை எவ்வாறு சோதிக்கலாம்?
டார்க் தீமை எனேபிள் செய்தவுடன் உங்கள் யூடியூப்பில் ஏதோவதொரு வீடியோவை ப்ளே செய்து பாருங்கள்.
பின் யூடியூப் ப்ளேயரின் மேல் வலது மூலையிலுள்ள கியர் ஐகானில் ஆம்பியன்ட் மோடை தெரிவு செய்யுங்கள்.
நீங்கள் ஆம்பியன்ட் மோடுக்கு மாறியதும் வீடியோவில் நிறங்கள் மாறுவதை காண்பீர்கள்.
நிறம் மாறியதும் யூடியூப் பிளேயரின் பேக்ரவுண்ட் சற்று மங்கலாகத் தெரியும்.
நீங்கள் டார்க் மோடை டிசேபள் செய்தால் ஆம்பியன்ட் மோடும் டிசேபள் ஆகிவிடும்.