இஸ்லாமிய அரசு என்ற ஐ.எஸ்.ஐ.எஸ் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பு, ஈராக் மற்றும் சிரியாவுக்கு அடுத்ததாக ஆபிரிக்காவில் தற்போது புதிய தளங்களை நிறுவி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக மோதல்கள் காரணமாக பதற்றத்தில் இருந்து வரும் மேற்கு ஆப்ரிக்க நாடுகளை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு தனக்கு ஏற்ற இடமாக மாறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வறுமை மற்றும் உணவுப்பற்றாகுறை காரணமாக ஏற்பட்டுள்ள பட்னி மற்றும் உள்நாட்டுப் போர்கள் காரணமாக மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் போராடி வருகின்றன.
நைஜர், மாலி மற்றும் புர்கினா பாசோ போன்ற மேற்கு ஆபிரிக்க நாடுகள் மோசமான சூழ்நிலையை எதிர்நோக்கி வருகின்றன..
இந்த நிலைமைகளை பயன்படுத்தி ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் அடிப்படைவாத தீவிரவாதிகள் அந்த நாடுகளில் தமது தளங்களை அமைத்து வருகின்றனர்.
மேற்கு ஆபிரிக்காவில் நிலவும் அரசியல் நிலையற்ற தன்மையுடன்,ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தளங்களும் அந்த நாடுகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது.
அத்துடன் ஐ.எஸ்.ஐ.எஸ்., வெளிநாடுகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளமை குறித்து புலனாய்வு அமைப்புகளிடம் இருந்து தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அந்த அமைப்பின் தீவிரவாதிகள் ஆபிரிக்க நாடுகளை புதிய தளமாக அமைத்து வருவதாகவும் ஐக்கிய நாடுகள் அமைப்பு கூறியுள்ளது.