சைக்கிளோட்டப் போட்டியொன்றில் இரண்டாம் பெற்றதற்கான பரிசை பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவின் கையால் வாங்க மறுத்த இளைஞனை பொலிசார் பின்தொடர ஆரம்பித்துள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற P2P சைக்கிளோட்டப் போட்டியின் 40 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் கம்பியூட்டர் மென்பொருள் வல்லுனரான சமீர விஜேபண்டார என்பவர் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டிருந்தார்
அவருக்கான பரிசை நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண வழங்க முயன்ற போது அதனைப் பெற்றுக் கொள்ள சமீர விஜேபண்டார மறுப்புத் தெரிவித்திருந்தார்
பொதுமக்கள் மீது பொலிஸார் மேற்கொள்ளும் அராஜகங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தான் அவ்வாறு நடந்து கொண்டதாக பின்னர் அவர் தெரிவித்திருந்தார்
இந்நிலையில் குறித்த இளைஞர் தொட்ர்பில் அவரது ஊரின் கிராம அதிகாரி போன்றோர் ஊடாக பொலிஸார் தகவல் சேகரிக்கத் தொடங்கியுள்ளதுடன், அவரைப் பின்தொடரவும் ஆரம்பித்துள்ளதாகவும் அதன் காரணமாக அவரது குடும்பத்தினர் பெரும் அச்சம் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது