ரஷ்ய ஜனாதிபதி பிளடிமீர் புட்டின் உக்ரையின் அவ்திவ்கா பகுதியினை கைப்பற்றியமைக்கு இராணுவத்திற்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
கிரெம்ளின் வலையத்தளத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த நகரம் கைப்பற்றப்பட்டமை தொடர்பான பத்திரத்தினை பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி புட்டினுக்கு வழங்கியருந்தார்.
இந்த நிலையில் இராணுவத்தினால் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி எட்டப்பட்டதாக புட்டின் தமது பாராட்டை வெளிப்படுத்தியிருந்தார்.
மேலும் இராணுவத்தளபதி கேர்ணல் ஜெனரல் ஆண்ட்ரி மோர்ட்விச்சேவ்வின் சிறந்த வழிகாட்டல் மூலம் குறித்த வெற்றி கிடைத்ததாகவும் ஜனாதிபதி புட்டின் சுட்டிக்காட்டியிருந்தார்.
கடந்த வரும் ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் ரஷ்யப் படையினர் அவ்திவ்கா பகுதி மீது தாக்குதல் தொடுத்திருந்தனர்.
குறித்த இராணுவ வெற்றி மூலம் எடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் புட்டினுக்கு வெற்றி வாய்ப்பை பெற்றுத்தரும் சம்பவம் என தெரிவிக்கப்படுகின்றது