பௌத்த மதத்திற்கு உரிய முறையில் முன்னுரிமை வழங்க இந்த அரசாங்கம் தவறிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
அநுராதபுரத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பிக்குகள் ஆலோசனை பேரவையின் கூட்டத்தில் கலந்த கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு ஏனைய மதங்களுக்கும் பொருத்தமான இடம் வழங்கப்பட வேண்டும் என அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது.
எனினும் மிஹிந்தலை புனித பூமியில் அமைந்துள்ள மிஹிந்தலை ரஜ மகா விகாரையின் மின்சாரம் கூட துண்டிக்கப்பட்டுள்ளது.
பௌத்த பிக்குகள் மேற்கொள்ளும் சமய சேவைகள் உட்பட ஏனைய சேவைகளையும் சூட்சமமாக நிறுத்த அரச கட்டமைப்பு செயற்பட்டு வருகின்றது.
சமயப் பணிகளை ஒவ்வொன்றாக நிறுத்தி வருகின்றது.
சாசன கல்வியுடன் பிரிவெனாக் கல்வியை ஊக்குவிப்பதன் மூலம் இந்த நிறுவனங்கள் புத்திஜீவிகளின் மையங்களாக மாற்றப்படும்.
சசுனட அருண ஊடாக பல பணிகளை செய்திருந்தாலும், அந்த திட்டங்களுக்கும் பல்வேறு பொய்யான சேறுபூசும் கதைகள் கூறப்பட்டு வருகின்றன.
இதனை பொருட்படுத்தாது, ஐக்கிய மக்கள் சக்தி அமைக்கும் அரசாங்கத்தில் சம்புத்த சாசனத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.